Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா...பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியது!

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா...பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியது!

By: Monisha Sat, 25 July 2020 09:27:58 AM

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா...பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியது!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உச்சக்கட்ட அளவில் பதிவாகி வருகிறது. இதுவரை இல்லாத வகையில் ஒரேநாளில் 6,785 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் விமானம் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த 27 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,99,749 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரே நாளில் மேலும் 88 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்த 6,504 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1,43,297 ஆக அதிகரித்துள்ளது.

tamil nadu,corona virus,infection,treatment,deaths ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

சென்னையில் மேலும் 1,299 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 21வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 92,206 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பால் மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவட்டம் வாரியாக நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம்:-
அரியலூர் 37
செங்கல்பட்டு 419
சென்னை 1299
கோயம்புத்தூர் 189
கடலூர் 91
தருமபுரி 363
திண்டுக்கல் 80
ஈரோடு 25
கள்ளக்குறிச்சி 179
காஞ்சிபுரம் 349
கன்னியாகுமரி 266
கரூர் 5
கிருஷ்ணகிரி 82
மதுரை 326
நாகப்பட்டினம் 46
நாமக்கல் 28
நீலகிரி 34
பெரம்பலூர் 16
புதுக்கோட்டை 95
ராமநாதபுரம் 72
ராணிப்பேட்டை 222
சேலம் 122
சிவகங்கை 82
தென்காசி 93
தஞ்சாவூர் 186
தேனி 234
திருப்பத்தூர் 56
திருவள்ளூர் 378
திருவண்ணாமலை 134
திருவாரூர் 96
தூத்துக்குடி 313
திருநெல்வேலி 171
திருப்பூர் 18
திருச்சி 217
வேலூர் 174
விழுப்புரம் 164
விருதுநகர் 424

Tags :