Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 41 லட்சத்தை தாண்டியது

அமெரிக்காவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 41 லட்சத்தை தாண்டியது

By: Nagaraj Thu, 23 July 2020 6:10:35 PM

அமெரிக்காவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 41 லட்சத்தை தாண்டியது

41 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு... அமெரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 41 இலட்சத்தை கடந்தது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, இதுவரை 41 இலட்சத்து 875பேர் இதுவரை வைரஸ் பெருந் தொற்றினால் பாதிப்படைந்துள்ளனர். உலகளவில் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த முதல்நாடாக விளங்கும் அமெரிக்காவில், இதுவரை மொத்தமாக, ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 183பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

மேலும், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 71ஆயிரத்து 967பேர் வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்ததோடு, ஆயிரத்து 205பேர் உயிரிழந்துள்ளனர்.

corona,vulnerability,usa,sri lanka,hospital ,கொரோனா, பாதிப்பு, அமெரிக்கா, இலங்கை, மருத்துவமனை

இதுதவிர வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்த 20இலட்சத்து 12ஆயிரத்து 55பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 19ஆயிரத்து 179பேர் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், இதுவரை 19 இலட்சத்து 42 ஆயிரத்து 637 பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 13 பேர் குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இதன்படி, வைரஸ் தொற்றிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 77ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் இதுவரை இரண்டாயிரத்து 752 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வைரஸ் தொற்றுக்கு உள்ளான 664 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|