Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 79 லட்சத்தை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 79 லட்சத்தை கடந்தது

By: Karunakaran Sun, 02 Aug 2020 4:16:41 PM

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 79 லட்சத்தை கடந்தது

சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த கொரோனா வைரஸ் உலகின் 213 நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

மேலும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு மற்றும் கடுமையான நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 1 கோடியே 79 லட்சத்து 98 ஆயிரத்து 419 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona virus,world,corona death,corona prevalence ,கொரோனா வைரஸ், உலகம், கொரோனா மரணம், கொரோனா பாதிப்பு

உலகளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 57 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பாதிப்புடைய 59 லட்சத்து 93 ஆயிரத்து 566 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 65 ஆயிரத்து 689 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து 1 கோடியே 10 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், கொரோனா காரணமாக இதுவரை 6 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

Tags :
|