Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 56 லட்சத்தை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 56 லட்சத்தை கடந்தது

By: Karunakaran Tue, 01 Sept 2020 7:22:27 PM

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 56 லட்சத்தை கடந்தது

சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த வைரஸ் உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இருப்பினும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 56 லட்சத்தை கடந்துள்ளது. இந்தியா, அமெரிக்கா, பிரேசிலில் கொரோனா வேகம் பலமடங்கு உயர்ந்துள்ளது. இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 78 ஆயிரத்து 512 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona virus,world,corona death,corona prevalence ,கொரோனா வைரஸ், உலகம், கொரோனா மரணம், கொரோனா பாதிப்பு

உலக அளவில் கொரோனா வேகமாக பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் 2 கோடியே 56 லட்சத்து 22 ஆயிரத்து 351 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 68 லட்சத்து 45 ஆயிரத்து 270 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 182 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து 1 கோடியே 75 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். இருப்பினும், கொரோனாவால் இதுவரை 8 லட்சத்து 54 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

Tags :
|