Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 56 லட்சத்தை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 56 லட்சத்தை கடந்தது

By: Karunakaran Fri, 24 July 2020 09:50:47 AM

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 56 லட்சத்தை கடந்தது

சீனாவில் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.

இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடாக அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

world,corona virus,corona death,corona prevalence ,உலகம், கொரோனா வைரஸ், கொரோனா மரணம், கொரோனா பாதிப்பு

தற்போது, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 56 லட்சத்தை கடந்துள்ளது. உலகம் முழுவதும் 1 கோடியே 56 லட்சத்து 41 ஆயிரத்து 906 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 95 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இருப்பினும் கொரோனா காரணமாக இதுவரை 6 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர்
உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 41,69,991 ஆக உள்ளது.


Tags :
|