Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனா பலி எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கியது

உலகம் முழுவதும் கொரோனா பலி எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கியது

By: Karunakaran Sat, 18 July 2020 09:36:56 AM

உலகம் முழுவதும் கொரோனா பலி எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கியது

சீனாவில் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் முதன் முதலாக தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியும் கொரோனா தாக்கம் குறையவில்லை.

கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது, உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கியுள்ளது.

world,corona virus,corona prevalence,corona death ,உலகம், கொரோனா வைரஸ், கொரோனா பாதிப்பு, கொரோனா மரணம்

உலகம் முழுவதும் 1 கோடியே 41 லட்சத்து 79 ஆயிரத்து 714 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புடைய 51 லட்சத்து 32 ஆயிரத்து 310 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 60 ஆயிரத்து 131 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகம் முழுவதும் 84 லட்சத்து 48 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா காரணமாக இதுவரை 5 லட்சத்து 98 ஆயிரத்து 537 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் பிரேசிலில் 1,110 பேரும், அமெரிக்காவில் 946 பேரும் கொரோனாவுக்கு உயிரிழந்தனர்.

Tags :
|