Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது

By: Karunakaran Tue, 11 Aug 2020 10:25:21 AM

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உள்ள வுகான் நகரில் கொரோனா வைரஸ் முதன் முதலாக தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தாலும், நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக 2 கோடிக்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர். கொரோனா பாதிப்பினால் உலகம் முழுவதும் இதுவரை 7.36 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் ரஷ்யா 4-வது இடத்தில் உள்ளது.

corona virus,corona death,russia,corona prevalence ,கொரோனா வைரஸ், கொரோனா மரணம், ரஷ்யா, கொரோனா பாதிப்பு

ரஷ்யாவில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைத் தாண்டியது. மேலும் அங்கு கொரோனா காரணமாக பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8.92 லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 118 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 92 ஆயிரத்து 654 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் 70 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து அங்கு இதுவரை 6.96 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

Tags :
|