Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொலம்பியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்தது

கொலம்பியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்தது

By: Karunakaran Thu, 20 Aug 2020 3:43:16 PM

கொலம்பியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்தது

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளது. கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தாலும், நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

தற்போது, உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.25 கோடியைத் தாண்டியுள்ளது. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிப்பு அடைந்த நாடுகளின் பட்டியலில் கொலம்பியா 8-வது இடத்தில் உள்ளது.

corona virus,corona infection,colombia,corona death ,கொரோனா வைரஸ், கொரோனா தொற்று, கொலம்பியா, கொரோனா மரணம்

தற்போது கொலம்பியாவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில் கொல்ம்பியாவில் ஒரே நாளில் 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளதால், அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கொரோனா தாக்குதலால் 360-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதையடுத்து, அங்கு கொரோனா பலி எண்ணிக்கை 16 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இருப்பினும் கொல்ம்பியாவில் இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 3.25 லட்சத்தை தாண்டியுள்ளது. முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவை தற்போது கொரோனா பரவலை தடுக்க வலியுறுத்தப்படுகிறது. இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

Tags :