Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரிட்டனில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியது

பிரிட்டனில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியது

By: Karunakaran Mon, 10 Aug 2020 09:57:39 AM

பிரிட்டனில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியது

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உள்ள வுகான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. இந்த கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் ஊரடங்கு மற்றும் பல கட்டுப்பாடு நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளன.

கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தாலும், கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 1.99 கோடியைக் கடந்துள்ளது. 7.31 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 1.28 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

corona virus,uk,corona death,corona prevalence ,கொரோனா வைரஸ், பிரிட்டன், கொரோனா மரணம், கொரோனா பாதிப்பு

உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் பிரிட்டன் தற்போது 12-வது இடத்தில் உள்ளது. தற்போது பிரிட்டனில் புதிதாக 1,062 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 3.10 லட்சத்தைக் கடந்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக பிரிட்டனில் 46 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது.

Tags :
|