Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • துருக்கியில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 2.50 லட்சத்தை தாண்டியது

துருக்கியில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 2.50 லட்சத்தை தாண்டியது

By: Karunakaran Tue, 18 Aug 2020 3:08:49 PM

துருக்கியில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 2.50 லட்சத்தை தாண்டியது

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தற்போது உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியும், கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், உலக அளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிப்பு அடைந்துள்ள நாடுகளின் பட்டியலில் துருக்கி 18-வது இடம் பிடித்துள்ளது.

corona virus,corona infection,turkey,corona death ,கொரோனா வைரஸ், கொரோனா தொற்று, துருக்கி, கொரோனா மரணம்

தற்போது, துருக்கியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.50 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இந்நிலையில் துருக்கியில் ஒரே நாளில் 1,233 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர். இதனால் துருக்கியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்து 542 ஆக உயர்ந்துள்ளது.

துருக்கியில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பினால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,996 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை மந்திரி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பில் உலகளவில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|