Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியது

சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியது

By: Karunakaran Sun, 07 June 2020 10:31:35 AM

சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியது

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. பல நாடுகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது சவுதி அரேபியாவில் கொரோனாவால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3,121 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.

corona virus,saudi arabia,china,corona damage ,கொரோனா வைரஸ், சவுதி அரேபியா,சீனா,கொரோனா பாதிப்பு

சவுதி அரேபியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை தற்போது 98,869 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஒரே நாளில் 34 பேர் கொரோனாவிற்கு பலியாகினர். இதனால் அங்கு, கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 676 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 3,121 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை தற்போது 98,869 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பலி எண்ணிக்கை 676 ஆக அதிகரித்துள்ளது.

Tags :
|