Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 6.20 லட்சத்தைக் கடந்தது

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 6.20 லட்சத்தைக் கடந்தது

By: Karunakaran Sat, 27 June 2020 12:00:47 PM

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 6.20 லட்சத்தைக் கடந்தது

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. . உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 98 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 4.94 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசில்,ரஷ்யா நாடுகள் உள்ளன. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ரஷ்யா 3-வது இடத்தில் உள்ளது.

coronavirus,russia,corona death,corona infection ,கொரோனா வைரஸ், ரஷ்யா, கொரோனா மரணம், கொரோனா தொற்று

தற்போது ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 6.20 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6 ஆயிரத்து 800 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 20 ஆயிரத்து 794 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 176 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 781 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு கொரோனா பாதிப்பில் இருந்து 3.84 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Tags :
|