Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 21 லட்சத்தைத் தாண்டியது

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 21 லட்சத்தைத் தாண்டியது

By: Karunakaran Sat, 13 June 2020 09:14:44 AM

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 21 லட்சத்தைத் தாண்டியது

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. தற்போது வரை கொரோனாவுக்கு மருந்து ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 76 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும் இதன் காரணமாக இதுவரை 4.25 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 21 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்க பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

coronavirus,america,china,brazil,corona infection ,கொரோனா வைரஸ்,அமெரிக்கா,சீனா,பிரேசில்

கடந்த சில வாரங்களாக அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 16 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து 8 லட்சத்து 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசில் நாடு கொரோனாவால் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. அமெரிக்காவில் அடுத்த மூன்று மாதங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|