Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டியது

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டியது

By: Karunakaran Tue, 09 June 2020 11:58:57 AM

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டியது

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. சீனாவில் தோன்றிய இந்த கொரோனா வைரஸ் காரணமாக பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை தற்போது உலகம் முழுவதும் 70 லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும் இதனால் இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.


உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. இந்த கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டியது. இன்று புதிதாக மேலும் 6,658 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

coronavirus,united states,racist,china ,கொரோனா வைரஸ்,அமெரிக்கா,இனவெறி,சீனா

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது 20,14,107 ஆக உயர்ந்துள்ளது. மேலும் புதிதாக 176 பேர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,12,645 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை அமெரிக்காவில் 7,63,303 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா காரணமாக அமெரிக்கா கடும் பொருளாதார சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் இனவெறிக்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|