Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 26 லட்சத்தைக் கடந்தது

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 26 லட்சத்தைக் கடந்தது

By: Karunakaran Mon, 29 June 2020 10:03:29 AM

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 26 லட்சத்தைக் கடந்தது

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. சீனாவை விட மற்ற நாடுகளில் கொரோனா தாக்கம் பலமடங்கு உள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. மேலும் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. தற்போது அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 26 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

coronavirus,america,corona death,corona infection ,கொரோனா வைரஸ், அமெரிக்கா, கொரோனா மரணம், கொரோனா தொற்று

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக சுமார் 25 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவதால் அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 1.28 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பில் இருந்து 10.90 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்பில் பிரேசில், ரஷ்யா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் உள்ளன. கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையில் இந்தியா 8-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :