Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 92 லட்சத்தை நெருங்கியது

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 92 லட்சத்தை நெருங்கியது

By: Karunakaran Tue, 23 June 2020 09:15:13 AM

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 92 லட்சத்தை நெருங்கியது

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள வுகான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகின் 213 நாடுகளுக்கு கொரோனா வைரஸ்பி பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

தற்போது, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 92 லட்சத்தை நெருங்கியுள்ளது.வ உலகளவில் 91 லட்சத்து 79 ஆயிரத்து 870 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 37 லட்சத்து 90 ஆயிரத்து 920 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறனர். மேலும் சிகிச்சை பெறுபவர்களில் 57 ஆயிரத்து 884 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

worldwide,coronavirus,corona death,america ,கொரோனா வைரஸ்,உலகம்,கொரோனா பாதிப்பு,அமெரிக்கா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 49 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இருப்பினும் உலகளவில் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 4 லட்சத்து 73 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் உலகளவில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கொரோனா பலி எண்ணிக்கையிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் 23,88,001 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது விருது செய்யப்பட்டுள்ளது . அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசில் நாடு உள்ளது. அங்கு 11,11,348 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பில் ரஷியாவிற்கு அடுத்தபடியாக இந்தியா 4-வது இடத்தில் உள்ளது.

Tags :