Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் இரண்டாவது நாளாக பலி எண்ணிக்கை 400க்கு கீழ் பதிவு

அமெரிக்காவில் இரண்டாவது நாளாக பலி எண்ணிக்கை 400க்கு கீழ் பதிவு

By: Monisha Tue, 16 June 2020 5:14:44 PM

அமெரிக்காவில் இரண்டாவது நாளாக பலி எண்ணிக்கை 400க்கு கீழ் பதிவு

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 80 லட்சத்தை தாண்டி உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 41 லட்சத்து 78 ஆயிரத்து 877 பேர் குணமடைந்துள்ளனர். இருப்பினும், கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 4 லட்சத்து 37 ஆயிரத்து 486 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளாக அமெரிக்கா, ரஷ்யா, பிரேசில், இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் உள்ளது. இந்நிலையில் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் இரண்டாவது நாளாக கொரோனா உயிரிழப்பு குறைந்து வருவதாக மருத்துவப் பல்கலைக்கழகம் ஜான் ஹாப்கின்ஸ் தெரிவித்துள்ளது.

coronavirus,usa,john hopkins university,casualties,deaths ,அமெரிக்கா,கொரோனா வைரஸ்,ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்,உயிரிழப்பு

இதுகுறித்து ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் கூறியுள்ளதாவது:- அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 400க்கும் குறைவான எண்ணிக்கையில் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. அமெரிக்காவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கொரோனா பலி 400க்கும் கீழாகவே பதிவாகியுள்ளது. இருப்பினும் தொற்று மற்றும் பாதிப்பு எண்ணிக்கை குறையவில்லை.

அமெரிக்காவில் கொரோனாவால் 21,82,950 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,18,283 பேர் பலியாகி உள்ளனர். 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர் என்று கூறி உள்ளது.

Tags :
|