Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீலகிரியில் முதன்முறையாக பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

நீலகிரியில் முதன்முறையாக பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

By: Nagaraj Sun, 10 May 2020 11:18:04 AM

நீலகிரியில் முதன்முறையாக பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை கோயம்பேடுக்கு சென்று வந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் நீலகிரி மாவட்டத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்வடைந்துள்ளது. இதில் முதன்முறையாக இந்த மாவட்டத்தில் பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஊட்டி அருகில் உள்ள நஞ்சநாடு கோழிக்கரை பகுதியைச் சேர்ந்த இருவருக்கும், கக்கன்ஜி காலனி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், குன்னூர் அருகில் உள்ள சேலாஸ் நேரு நகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 4 பேருக்குத் கொரோனா உறுதியாகி உள்ளது. இதையடுத்து இவர்கள் கோவையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் உறவினர்கள் 21 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் சிகிச்சை பெற்றுவரும் கோழிக்கரையை சேர்ந்த ஒருவரின் 24 வயதுடைய சகோதரிக்கு தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானது. அவர் உடனடியாக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

nilgiri,first female victim,corona,action ,நீலகிரி, முதல் பெண் பாதிப்பு, கொரோனா, நடவடிக்கை

நீலகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் பெண் இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது வரை 14 ஆக உயர்ந்துள்ளது

இதற்கிடையில் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது: பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் மூலம் நாள்தோறும் 3 முறை கிருமி நாசினியைக் கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது. அனைத்து குடும்பங்களுக்கும் முகக்கவசம், விட்டமின் சி மாத்திரைகள், ஜிங்க் மாத்திரைகள், மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

nilgiri,first female victim,corona,action ,நீலகிரி, முதல் பெண் பாதிப்பு, கொரோனா, நடவடிக்கை

இப்பகுதிகளில் மருத்துவம், ஊரக வளர்ச்சி, வருவாய், காவல்துறை மற்றும் தன்னார்வலர்களைக் கொண்டு குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.

இப்பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் ரேசன் கடைகள் மூலம் வீட்டிற்கே கொண்டுச் சென்று வழங்கப்படும். அதேபோல், காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் வீடு வீடாகச் சென்று வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|