Advertisement

கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 65 கோடியாக உயர்வு

By: Nagaraj Tue, 06 Dec 2022 5:43:11 PM

கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 65 கோடியாக உயர்வு

நியூயார்க்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 65 கோடியாக உயர்ந்துள்ளது.


உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 65 கோடியாக உயர்ந்துள்ளது.

crore people,virus,world, ,உலகம், கொரனா, பாதிக்கப்பட்டவர்

உலகம் முழுவதும் 650,238,209 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனா வைரஸிற்கு 6,647,653 பேர் இறந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 627,248,685 பேர் குணமாகி உள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உலகம் முழுவதும் 16,341,871 கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 100,902,829 என உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 1,106,976 என்பதும், குணமானோர் எண்ணிக்கை 98,309,801 என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|