Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஷ்யாவில் 3 லட்சத்தை நெருங்குகிறது கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை

ரஷ்யாவில் 3 லட்சத்தை நெருங்குகிறது கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை

By: Nagaraj Wed, 20 May 2020 10:36:54 AM

ரஷ்யாவில் 3 லட்சத்தை நெருங்குகிறது கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 49.43 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கி உள்ளது. இதனால் உலக அளவில் கொரோனா பாதிப்பு நாடுகள் பட்டியலில் ரஷ்யா இரண்டாவது இடத்தில் உள்ளது.

உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலால் வெகு அச்சத்தில் உள்ளன. இதுவரை உலகம் முழுவதும் இந்த வைரஸ் தொற்றுக்கு இதுவரை 3.22 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்


kill count,treatment,2nd place,corona impact ,பலி எண்ணிக்கை, சிகிச்சை, 2வது இடம், கொரோனா பாதிப்பு

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவை தொடர்ந்து ரஷ்யா மக்களை வெகு அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் அமெரிக்கா முதலிடத்திலும், ரஷ்யா இரண்டாவது இடத்திலும் உள்ளன.

கடந்த சில நாட்களாக ரஷ்யாவில் ஒரு நாளின் சராசரி பாதிப்பு விகிதம் 10 ஆயிரமாக இருந்து வருகிறது. கொரோனா தொற்றுகளை கட்டுப்படுத்த அதிபர் புதின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,263 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,99,941 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்கள் எண்ணிக்கை 2,837 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 76,130 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Tags :