Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை

By: vaithegi Fri, 18 Nov 2022 12:51:33 PM

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை

இந்தியா : கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை .... சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா பெருந்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது. தற்போது கொரோனா வைரஸ் 225க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மிக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி கொண்டு வருகிறது.

இதையடுத்து இந்தியாவில் , கடந்த 24 மணி நேரத்தில் 656 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,46,67, 967 ஆக அதிகரித்துள்ளது.

corona,india ,கொரோனா ,இந்தியா

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7,034- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை மட்டும் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,41,30,380- ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் 07 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் நாடு முழுவது கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,30, 553ஆக உயர்ந்தது. மேலும் இந்தியாவில் நேற்று மட்டும் 1,03,328 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

Tags :
|