Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 3 லட்சத்தை தாண்டியது கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை

3 லட்சத்தை தாண்டியது கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை

By: Nagaraj Fri, 15 May 2020 3:16:09 PM

3 லட்சத்தை தாண்டியது கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்தது. இதனால் மக்கள் வெகு அச்சத்தில் உள்ளனர்.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. உலகம் முழுவதும் 213 நாடுகள்/பிரதேசங்களுக்கு இந்த கொரோனா பரவியுள்ளது.

3 lakh,exceeded,victims,world,corona ,3 லட்சம், தாண்டியது, பலியானவர்கள், உலகம், கொரோனா

இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், கொரோனாவால் ஏற்படும் தாக்கமும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்தது. 44 லட்சத்து 79 ஆயிரத்து 933 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

3 lakh,exceeded,victims,world,corona ,3 லட்சம், தாண்டியது, பலியானவர்கள், உலகம், கொரோனா

வைரஸ் பரவியவர்களில் 24 லட்சத்து 96 ஆயிரத்து 689 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 45 ஆயிரத்து 879 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 16 லட்சத்து 82 ஆயிரத்து 960 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், இந்த வைரசுக்கு உலகம் முழுவதும் இதுவரை 3 லட்சத்து 284 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags :
|
|