Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.50 லட்சத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.50 லட்சத்தை தாண்டியது

By: Nagaraj Wed, 17 June 2020 1:04:54 PM

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.50 லட்சத்தை தாண்டியது

3.50 லட்சத்தை கடந்தது பாதிப்பு எண்ணிக்கை... இந்தியா முழுவதும் நேற்று ஒரே நாளில் மேலும் 10 ஆயிரம் பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில், மேலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 2,701 பேருக்கு புதியதாக நோய்த்தொற்று உறுதியானதாகவும், 81 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் மாநில அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 13 ஆயிரத்தை கடந்துள்ளது.

corona,state governments,india,impact,increase ,கொரோனா, மாநில அரசுகள், இந்தியா, பாதிப்பு, அதிகரிப்பு

டெல்லியில் 1,859 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நாட்டிலேயே அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் அங்கு 93 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1837 ஆக உயர்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்தை கடந்துள்ளது. ஹரியானாவில் மேலும் 550 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

குஜராத்தில் புதிதாக 524 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 500 கடந்துள்ளது. மேற்குவங்கத்தில் மேலும், 415 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

இதேபோன்று, ராஜஸ்தானில் 235 பேருக்கும், மத்தியபிரதேசத்தில் 134 பேருக்கும், தெலங்கானாவில் 213 பேருக்கும் புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக அந்தந்த மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.

Tags :
|
|
|