Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்ணை 2.46 லட்சமாக உயர்வு

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்ணை 2.46 லட்சமாக உயர்வு

By: Nagaraj Sun, 07 June 2020 2:00:15 PM

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்ணை 2.46 லட்சமாக உயர்வு

2.46 லட்சம் பேருக்கு கொரோனா... இந்தியா முழுவதும் மேலும் 9 ஆயிரத்து 971 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நாட்டில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 46 ஆயிரத்தை கடந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்தோர், கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரங்களை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் அதிகபட்சமாக 9 ஆயிரத்து 971 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 287 பேர் மரணமடைந்துள்ளனர்.

corona,impact,statistic,substantially increase,states ,கொரோனா, பாதிப்பு, புள்ளி விபரம், கணிசமாக உயர்வு, மாநிலங்கள்


இதையடுத்து நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 46 ஆயிரத்து 628ஆகவும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 929ஆகவும் அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, 1 லட்சத்து 20 ஆயிரத்து 406 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இது தவிர்த்து நாடு முழுவதும் மருத்துவ சிகிச்சையில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 293 பேர் குணமடைந்து தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 37 ஆயிரத்து 390 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82 ஆயிரத்து 968ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 969ஆகவும் அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவுக்கு அடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 ஆயிரத்து 152ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட டெல்லியில் 27 ஆயிரத்து 654ஆகவும், குஜராத்தில் 19 ஆயிரத்து 592ஆகவும், ராஜஸ்தானில் 10 ஆயிரத்து 331ஆகவும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இதேபோல் மற்ற மாநிலங்களிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

Tags :
|
|