Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38,965 ஆக அதிகரிப்பு

சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38,965 ஆக அதிகரிப்பு

By: Monisha Thu, 11 June 2020 09:24:58 AM

சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38,965 ஆக அதிகரிப்பு

சீனாவின் உகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது கடும் சவாலாக உள்ளது.

சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38,965 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து சிங்கப்பூர் சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:- கடந்த 24 மணி நேரத்தில் சிங்கப்பூரில் கொரோனா தொற்றுக்கு 451 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது சிங்கப்பூரில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38,965 ஆக அதிகரித்துள்ளது.

singapore,coronavirus,foreign workers,workers accommodation,medical examination ,சிங்கப்பூர்,கொரோனா வைரஸ்,வெளிநாட்டுத் தொழிலாளர்கள்,தொழிலாளர் விடுதி,மருத்துவப் பரிசோதனை

கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டுத் தொழிலாளர்கள். இதுவரை 25,877 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.

தெற்காசிய நாடுகளிலிருந்து மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிங்கப்பூரில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் அங்குள்ள தொழிலாளர் விடுதிகளில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

மிக நெருக்கமாகக் கட்டப்பட்டு இருக்கும் அத்தகைய விடுதிகளில்தான் தற்போது அதிக அளவில் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. எனவே, விடுதிகளை மையமாக வைத்து சிங்கப்பூர் அரசு மருத்துவப் பரிசோதனைகளை செய்து வருகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags :