Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 34.13 லட்சமாக உயர்வு

அமெரிக்காவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 34.13 லட்சமாக உயர்வு

By: Nagaraj Mon, 13 July 2020 11:12:08 AM

அமெரிக்காவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 34.13 லட்சமாக உயர்வு

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனால் மக்கள் வெகு அச்சத்தில் உள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 57 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டதால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 13 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிககை அதிகரித்து காணப்பட்டாலும், உயிரிழப்பு விகிதம் பெருமளவு குறைந்துள்ளது. நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் பேர் மரணித்து வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 380 பேர் உயிரிழந்துள்ளனர்.

in the united states,the death toll is,at a minimum,rising ,அமெரிக்கா, பலி எண்ணிக்கை, குறைந்தது, பாதிப்பு அதிகரிப்பு

இதனால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 700ஐக் கடந்துள்ளது. அந்நாட்டில் இதுவரை 15 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பெருந்தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். 17 லட்சத்திற்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்காதான் முதல் இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :