Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66.86 கோடியாக உயர்வு

கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66.86 கோடியாக உயர்வு

By: vaithegi Mon, 09 Jan 2023 10:52:11 AM

கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66.86 கோடியாக உயர்வு

வாஷிங்டன்: சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா வைரசின் பாதிப்பு கண்டறியப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது.அதனையடுத்து தற்போது கொரோனாவானது 228-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி கொண்டு வருகிறது.

எனவே கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் பல்வேறு வகையில் உருமாற்றமடைந்த வைரசானது தொடர்ந்து பரவி கொண்டு வருகிறது. இதையடுத்து இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 66 கோடியே 86 லட்சத்து 64 ஆயிரத்து 437 ஆக உயர்ந்துள்ளது.

corona,world,victims ,கொரோனா ,உலகம் ,பாதிக்கப்பட்டவர்கள்

இதனை அடுத்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 19 லட்சத்து 81 ஆயிரத்து 761 பேர் சிகிச்சை பெற்று கொன்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை மட்டும் 63 கோடியே 99 லட்சத்து 68 ஆயிரத்து 976 பேர் குணமடைந்துள்ளனர்.

இருப்பினும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை மட்டும் 67 லட்சத்து 13 ஆயிரத்து 700 பேர் உயிரிழந்து உள்ளனர். இவற்றில் அதிக அளவாக அமெரிக்காவில் 11 லட்சத்து 21 ஆயிரத்து 97 பேரும், பிரேசிலில் 6 லட்சத்து 94 ஆயிரத்து 909 பேரும், இந்தியாவில் 5 லட்சத்து 30 ஆயிரத்து 720 பேரும் உயிரிழந்து உள்ளனர்.

Tags :
|
|