Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்வு

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்வு

By: vaithegi Tue, 10 Jan 2023 09:40:46 AM

உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்வு

இந்தியா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 66.90 கோடியாக உயர்ந்துள்ளது

இதனை அடுத்து உலகம் முழுவதும் 669,017,110 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,715,888 பேர் மரணமடைந்துள்ளனர் எனவும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 640,337,467 பேர் மீண்டனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 21,963,755 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன

globally,corona,number ,உலகளவில் ,கொரோனா ,எண்ணிக்கை

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 103,123,617 என உயர்ந்துள்ளது . அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 1,121,298 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 100,027,148 ஆகும். இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44,681,355 என உயர்ந்துள்ளது.

அதனை தொடர்ந்து இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 530,721 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 44,147,002 ஆகும். பிரான்ஸ் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 39,409,429 என உயர்ந்துள்ளது. பிரான்ஸில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 162,990 மற்றும் குணமானோர் எண்ணிக்கை 38,808,127 ஆகும்.

Tags :
|