Advertisement

உலகளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை

By: vaithegi Tue, 15 Nov 2022 09:56:02 AM

உலகளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை

வாஷிங்டன்: சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா பெருந்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது. தற்போது கொரோனா வைரஸ் 225க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மிக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி கொண்டு வருகிறது.

எனவே கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பல்வேறு வகையில் உருமாற்றமடைந்து பாதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது.

corona,worldwide ,கொரோனா ,உலகளவில்

இதையடுத்து இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64 கோடியே 5 லட்சத்து 21 ஆயிரத்து 580 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 36 லட்சத்து 70 ஆயிரத்து 626 பேர் சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர்.

மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை மட்டும் 62 கோடியே 2 லட்சத்து 34 ஆயிரத்து 690 பேர் குணமடைந்துள்ளனர். இருப்பினும் , கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை மட்டும் 66 லட்சத்து 16 ஆயிரத்து 264 பேர் உயிரிழந்து உள்ளனர்.

Tags :
|