Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோயால் பாதித்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 35 ஆயிரத்தை தண்டியுள்ளது

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோயால் பாதித்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 35 ஆயிரத்தை தண்டியுள்ளது

By: vaithegi Thu, 18 Aug 2022 06:54:28 AM

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோயால் பாதித்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 35 ஆயிரத்தை தண்டியுள்ளது

ஜெனீவா: ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய குரங்கு அம்மை நோய் தற்போது ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற 92க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி கொண்டு வருகிறது.

இதனை அடுத்து உலகம் முழுவதிலும் குரங்கு அம்மை காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அடுத்தடுத்து தொடர்ந்து உயர்ந்து கொண்டே வரும் நிலையில் உலகம் முழுவதும் சுகாதார நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசுகள் மிக தீவிரபடுத்தி உள்ளன.

monkey measles,world,number ,குரங்கு அம்மை ,உலகம் ,எண்ணிக்கை

இதை தொடர்ந்து இந்த நிலையில், உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோயால் பாதித்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 35 ஆயிரத்தை கடந்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் குரங்கு அம்மை நோயால் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இதுதொடர்பாக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கூறுகையில், குரங்கு அம்மை நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளும் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

இதையடுத்து பல நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்த தடுப்பூசியின் தேவை அதிகம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Tags :
|