Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மும்பை தாராவியில் கொரோனா வைரசால் பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கியது

மும்பை தாராவியில் கொரோனா வைரசால் பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கியது

By: Karunakaran Fri, 12 June 2020 09:36:46 AM

மும்பை தாராவியில் கொரோனா வைரசால் பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கியது

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவிலே கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 98 ஆயிரத்தை நெருங்கியது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. தாராவியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. மும்பை தாராவி குடிசைப்பகுதியில் மேலும் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,984 ஆக அதிகரித்துள்ளது.

mumbai,dharavi,coronavirus,maharastra ,தாராவி,மும்பை.கொரோனா,மகாராஷ்டிரா

மேலும் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 75 ஆக உள்ளது. தற்போது மஹாராஷ்டிராவில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. இதனால் கொரோனா அச்சமின்றி மக்கள் அதிகளவில் வெளியே சுற்றி வருகின்றனர். இதனால் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

தனியார் அலுவலகங்கள், வணிகங்கள் திறக்கப்பட்டு பெஸ்ட் பஸ் போன்றவை இயக்கப்பட்டுள்ளன. அலுவலகங்கள் திறக்கப்பட்டதால் ஊழியர்கள், பணியாளர்கள் வேலைக்கு சென்று வருகின்றனர். எந்தவித கொரோனா அச்சமுமின்றி கூட்டமாக பஸ்களில் பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Tags :
|