Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 88 லட்சத்தை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 88 லட்சத்தை கடந்தது

By: Karunakaran Tue, 21 July 2020 09:39:54 AM

உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 88 லட்சத்தை கடந்தது

சீனாவில் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகளில் ஊரடங்கை அமல்படுத்தியும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்த கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தற்போது உலகம் முழுவதும் 1 கோடியே 48 லட்சத்து 45 ஆயிரத்து 241 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

world,coronavirus,corona prevalence,corona death ,உலகம், கொரோனா வைரஸ், கொரோனா பாதிப்பு, கொரோனா மரணம்

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புடைய 53 லட்சத்து 33 ஆயிரத்து 654 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 59 ஆயிரத்து 805 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 6 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 88 லட்சத்து 98 ஆயிரத்து 749 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் மட்டும் 18,49,989 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Tags :
|