Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 93 லட்சத்தை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 93 லட்சத்தை கடந்தது

By: Karunakaran Thu, 23 July 2020 09:51:31 AM

உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 93 லட்சத்தை கடந்தது

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள வுகான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. மேலும் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. தற்போது, உலகம் முழுவதும் 1 கோடியே 53 லட்சத்து 64 ஆயிரத்து 925 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

world,corona virus,corona prevalence,corona death ,உலகம், கொரோனா வைரஸ், கொரோனா பாதிப்பு, கொரோனா மரணம்

கொரோனா பாதிப்புடைய 53 லட்சத்து 91 ஆயிரத்து 736 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறனர். இவர்களில் 66 ஆயிரத்து 174 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 6 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 93 லட்சத்து 43 ஆயிரத்து 850 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக பிரேசில், இந்தியா நாடுகள் உள்ளன.

Tags :
|