Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 86 லட்சத்தை கடந்தது

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 86 லட்சத்தை கடந்தது

By: Nagaraj Sun, 19 July 2020 1:49:25 PM

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 86 லட்சத்தை கடந்தது

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 86 இலட்சத்தைக் கடந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரையில், ஒரு கோடியே 44 இலட்சத்து 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 4ஆயிரத்திற்கும் மேலாக பதிவாகியுள்ளது.

healed,world size,corona,statistics ,குணமடைந்தனர், உலக அளவு, கொரோனா, புள்ளிவிபரங்கள்

கொரோனாவினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையிலும் அந்த தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கமைய இந்த தொற்றிலிருந்து இதுவரையில், 86 இலட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

அதேநேரம் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 52 இலட்சத்து 10 ஆயிரத்து 644 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 73 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

Tags :
|
|