Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,10,807 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,10,807 ஆக அதிகரிப்பு

By: Monisha Sat, 18 July 2020 09:54:45 AM

தமிழகத்தில் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,10,807 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 10 ஆயிரத்து 807 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று புதிதாக 4 ஆயிரத்து 538 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 60 ஆயிரத்து 907 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் அடங்குவர். நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 47 ஆயிரத்து 782 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 2,315 பேர் பலியாகியுள்ளனர். ஆனாலும், மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து 3 ஆயிரத்து 391 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 10 ஆயிரத்து 807 ஆக அதிகரித்துள்ளது. விமானநிலையம் மற்றும் ரெயில் நிலைய கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த 505 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

tamil nadu,corona virus,infection,treatment,discharge ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,டிஸ்சார்ஜ்

மாவட்ட வாரியாக கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை:-
அரியலூர் - 495
செங்கல்பட்டு - 6,763
சென்னை - 67,077
கோவை - 696
கடலூர் - 1,278
தர்மபுரி - 131
திண்டுக்கல் - 727
ஈரோடு - 265
கள்ளக்குறிச்சி - 1,378
காஞ்சிபுரம் - 2,348
கன்னியாகுமரி - 680
கரூர் - 158
கிருஷ்ணகிரி - 188
மதுரை - 4,677
நாகை - 207
நாமக்கல் - 143
நீலகிரி - 116
பெரம்பலூர் - 168
புதுக்கோட்டை - 506
ராமநாதபுரம் - 1,384
ராணிப்பேட்டை - 1,065
சேலம் - 1,148
சிவகங்கை - 629
தென்காசி - 325
தஞ்சாவூர் - 486
தேனி - 883
திருப்பத்தூர் - 317
திருவள்ளூர் - 5,019
திருவண்ணாமலை - 2,143
திருவாரூர் - 552
தூத்துக்குடி - 1,339
திருநெல்வேலி - 1,142
திருப்பூர் - 203
திருச்சி - 1,067
வேலூர் - 1,999
விழுப்புரம் - 1,235
விருதுநகர் - 1,065

Tags :