Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5,915 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5,915 ஆக உயர்வு

By: vaithegi Sun, 19 Mar 2023 3:18:36 PM

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5,915 ஆக உயர்வு

இந்தியா: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 526 ஆக பதிவாகியுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5,915 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், புதிய வகை கொரோனாவான XBB 1.16, நம் நாட்டில் 76 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது என இந்தியாவில் கொரோனா பரவும் மரபணு வரிசைமுறை மற்றும் வைரஸ் மாறுபாட்டை ஆய்வு செய்து வரும் INSACOG தகவல் தெரிவித்துள்ளது.

corona,number,treatment ,கொரோனா,எண்ணிக்கை ,சிகிச்சை

எனவே அதன்படி, கர்நாடகத்தில் 30, மகாராஷ்டிராவில் 29, புதுச்சேரியில் 7, டெல்லியில் 5, தெலுங்கானாவில் 2, குஜராத் 1, இமாசலபிரதேசம் 1, ஒடிசாவில் 1 என்று இந்த புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இந்தாண்டு ஜனவரி மாதத்தில் தான், XBB 1.16 மாறுபாடு கண்டறியப்பட்டது. இதனை அடுத்து பிப்ரவரியில் மொத்தம் 59 ஆக உயர்ந்தது. மார்ச் மாதத்தில் மட்டும், 15 பேருக்கு இந்த புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என தகவல் தெரிவித்துள்ளது.

Tags :
|
|