Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் 65.52 கோடியாக உயர்வு

உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் 65.52 கோடியாக உயர்வு

By: vaithegi Sat, 18 Mar 2023 09:52:26 AM

உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் 65.52 கோடியாக உயர்வு

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68.23 கோடியாக அதிகரிப்பு.

உகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

corona,impact,count ,கொரோனா, பாதிப்பு,எண்ணிக்கை

எனவே கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும், டெல்டா, ஒமைக்ரான் என உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 கோடியே 23 லட்சத்து 48 ஆயிரத்து 582 ஆக உயர்ந்து உள்ளது.

இதனை அடுத்து உலகம் முழுவதும் கொரோனாவால் 65 கோடியே 52 லட்சத்து 72 ஆயிரத்து 283 பேர் குணமடைந்து உள்ளனர். இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 லட்சத்து 18 ஆயிரத்து 572 ஆக உயர்ந்து உள்ளது.

Tags :
|
|