Advertisement

உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை

By: vaithegi Thu, 16 Feb 2023 10:52:10 AM

உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை

வாஷிங்டன், உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 67.85 கோடியாக உயர்ந்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டு வருகிறது.

number,corona ,எண்ணிக்கை,கொரோனா

எனவே கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி கொண்டு வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.85 லட்சத்தை தாண்டியது.

பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,785,210 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 678,022,287 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 650,573,168 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 40,979 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர்.

Tags :
|