Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புலிகள் எண்ணிக்கையை கேமரா மூலம் எடுக்கப்பட்ட முதல் சாதனை

புலிகள் எண்ணிக்கையை கேமரா மூலம் எடுக்கப்பட்ட முதல் சாதனை

By: Nagaraj Sat, 11 July 2020 11:16:22 PM

புலிகள் எண்ணிக்கையை கேமரா மூலம் எடுக்கப்பட்ட முதல் சாதனை

புலிகள் கணக்கெடுப்பு சாதனை... 2018 ல் இந்தியாவில் எடுக்கப்பட்ட புலிகள் கணக்கெடுப்பு, உலகில் புலிகளின் எண்ணிக்கையை கேமரா மூலம் எடுக்கப்பட்ட முதல் சாதனையாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

இது குறித்து மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டுவிட்டிரில் பதிவிட்டு இருப்பதாவது:

பிரதமரின் தலைமையில், "சங்கல்ப் சே சித்தி" மூலம் இலக்குக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதற்கான தீர்மானத்தை இந்தியா நிறைவேற்றியது தொடர்ந்து நாடு முழுவதும் கடந்த 2018 ம் ஆண்டு புலிகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பில் வனவிலங்குகளின் நடமாட்டம் குறித்து கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. இதில் 2,967 என்ற எண்ணிக்கையில் புலிகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது.

tiger census,record,union minister,camera ,புலிகள் கணக்கெடுப்பு, சாதனை, மத்திய அமைச்சர், கேமரா

இது உலகில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் 75 சதவீதமாகும். 141 இடங்களில் 26,838 கேமராக்கள் கணக்கெடுப்பிற்காக பயன்படுத்தப்பட்டது. மொத்தமாக 3.48 கோடி போட்டோக்கள் எடுக்கப்பட்டுள்ளது.இதில் 76,651 புலிகள் போட்டோவும்,51,777 சிறுத்தைகள் போட்டோவும் பதிவாகி உள்ளன. இவைகளை தவிர மற்ற வன விலங்குகளின் போட்டோக்களும் பதிவாகி உள்ளன.

மேலும் இந்திய வனவிலங்கு நிறுவனம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் துறையின் கீழ் உள்ள தேசிய புலிகள் காப்பக அமைப்பும் இணைந்து இந்த கணக்கெடுப்பை நடத்தியது. அதில் 2006 ம் ஆண்டில் 1,411 என்ற அளவில் மட்டுமே புலிகள் இருந்தது.2014ம் ஆண்டில் 2,226 என்ற எண்ணிக்கையில் இருந்த புலிகளின் எண்ணிக்கை 2018 ல் 2,967ஆக அதிகரித்துள்ளது.

இதில் வயதுக்கு வந்த புலிகளின் எண்ணிக்கை மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டு உள்ளது. குட்டி புலிகளின் எண்ணிக்கை கணக்கில் கொள்ளப்படவில்லை. இதன் மூலம் புலிகள் வாழ்வதற்கு இந்தியா பாதுகாப்பான நாடுஎ ன்பது இந்த கணக்கெடுப்பின் மூலம் நிரூபணமாகி உள்ளது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Tags :
|