Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவால் பிரேசிலில் பாதித்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்தது

கொரோனாவால் பிரேசிலில் பாதித்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்தது

By: Nagaraj Fri, 17 July 2020 3:10:25 PM

கொரோனாவால் பிரேசிலில் பாதித்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்தது

பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 20 லட்சத்தை கடந்துள்ளது. 78 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

உலக அளவிலான கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், 2ம் இடத்தில் பிரேசிலும் உள்ளன. இந்தியாவும், ரஷ்யாவும் அடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. இந்நிலையில், 'கொரோனாவைப் பற்றி மக்கள் கவலைப்படக் கூடாது. முகக்கவசம் அணியத் தேவையில்லை. மக்கள் சுதந்திரமாக வெளியே வர வேண்டும்' என, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா கூறி வந்தார்.

brazil,health system,corona infection,neglect ,பிரேசில், சுகாதார அமைப்பு, கொரோனா தொற்று, அலட்சியம்

அவரது அலட்சியத்தையும் கருத்தையும் எதிர்த்த, சுகாதார அமைச்சர்கள் இரண்டு முறை மாற்றப்பட்டனர். இந்நிலையில், அதிபர் ஜெய்ர் போல்சனோராவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் பிரேசிலில் கடந்த இரு மாதங்களில் கொரோனா பரவல் இரு மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக தினமும் 40 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று மட்டும் 45 ஆயித்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

பிரேசிலில் இதுவரை, 20.14 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 76,822 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், 'கொரோனா பரவலை பிரேசில் அரசு சரியாக கையாளவில்லை. ஜெய்ர் போல்சனோராவின் அலட்சியமே பிரேசிலில் கொரோனாவால் அதிகப்படியான பாதிப்பும் உயிரிழப்பும் ஏற்படக் காரணம்' என, உலக சுகாதார அமைப்பு குற்றஞ்சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|