Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முகக்கவசம் அணிந்து பேச சொன்னதால் ஆத்திரம்; பெண் ஊழியரை கொடூரமாக தாக்கிய அதிகாரி

முகக்கவசம் அணிந்து பேச சொன்னதால் ஆத்திரம்; பெண் ஊழியரை கொடூரமாக தாக்கிய அதிகாரி

By: Nagaraj Tue, 30 June 2020 7:21:01 PM

முகக்கவசம் அணிந்து பேச சொன்னதால் ஆத்திரம்; பெண் ஊழியரை கொடூரமாக தாக்கிய அதிகாரி

அதிகாரியின் கொடூர தாக்குதல்... முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு தான் பேச வேண்டும் என்று கூறிய பெண் ஒப்பந்த ஊழியர் மீது அதிகாரி ஒருவர் கொடூர தாக்குதல் நடத்திய வீடியோ வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருக்கும் ஆந்திர மாநில சுற்றுலாத் துறை ஓட்டலில் துணை மேலாளராக பணியாற்றி வருபவர் பாஸ்கர் ராவ். அதே ஓட்டலில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்பவர் உஷாராணி. இந்நிலையில் வேலை விஷயமாக உஷாராணியிடம் பாஸ்கர் ராவ் பேசினார். அப்போது கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு பேச வேண்டும். இதுபோன்று மாஸ்க் அணியாமல் எங்களிடம் பேசக் கூடாது என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பாஸ்கர் ராவ், ”படித்து பட்டம் பெற்று வேலைக்கு வந்த எனக்கு, படிக்காத நீ அறிவுரை கூறுவது தவறு” என்று கூறி உஷாராணியை எச்சரித்துள்ளார். உடனே வேகமாக ஓடிச் சென்று உஷாராணியை அறைந்துள்ளார்.

cctv,hotel,deputy manager,assault,female employee ,சிசிடிவி, ஓட்டல், துணை மேலாளர், தாக்குதல், பெண் ஊழியர்

பின்னர் அங்கிருந்த கட்டையை எடுத்து அவரின் தலையில் விடாமல் தாக்கியுள்ளார். இதனால் அவர் அலறி துடித்துக் கொண்டே கீழே விழுந்தார். அப்போதும் அடங்காத பாஸ்கர் ராவ் அப்பெண்ணை உதைத்து துன்புறுத்தியுள்ளார்.

பின்னர் அங்கிருந்து ஊழியர்கள் ஓடிவந்து பாஸ்கர் ராவை தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. இது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தர்க்கா மிட்டா காவல் நிலையத்தில் உஷாராணி அளித்த புகாரின் பேரில் துணை மேலாளர் பாஸ்கர் ராவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட ஓட்டலில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கும் காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையில் துணை மேலாளர் பாஸ்கர் ராவ் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஆந்திர மாநில சுற்றுலாத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Tags :
|
|