Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பள்ளிகள் எப்போது திறக்க படும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியீடு

பள்ளிகள் எப்போது திறக்க படும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியீடு

By: vaithegi Fri, 26 May 2023 09:54:04 AM

பள்ளிகள் எப்போது திறக்க படும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியீடு

சென்னை: கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் 6 முதல் 12- ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் வருகிற ஜூன் 1ம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் தமிழகத்தில் தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து கொண்டு வருகிறது. இதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி கொண்டு வருகின்றனர்.

schools,anpil mahesh poiyamozhi ,பள்ளிகள் ,அன்பில் மகேஷ் பொய்யாமொழி

இதையடுத்து இச்சூழலில் சென்னையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது மாவட்டங்களின் நிலவும் வெயிலின் தாக்கம் பற்றி அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது. இதனால் பள்ளி திறப்பு தேதியை தள்ளி வைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

எனவே ஒட்டுமொத்தமாக 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 7ஆம் தேதி பள்ளிகளை திறக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டதாகவும், மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என்றும் அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :