Advertisement

நடிகை கங்கனாவுக்கு செம பதிலடி கொடுத்த மூதாட்டி

By: Nagaraj Fri, 04 Dec 2020 4:19:18 PM

நடிகை கங்கனாவுக்கு செம பதிலடி கொடுத்த மூதாட்டி

பதிலடி கொடுத்த மூதாட்டி... பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் பதிவுக்கு மொஹிந்தர் கவுர் என்ற மூதாட்டி கொடுத்துள்ள பதில் வைரலாகி வருகிறது.

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சமீபகாலமாக பல விவகாரங்களில் கருத்து தெரிவித்து சர்ச்சைகளில் சிக்கிக்கொள்கிறார். எப்போதும் ட்விட்டரில் பிசியாக இருந்துவரும் கங்கனா, நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை தொடர்பாக கருத்து தெரிவித்து, மகாராஷ்டிரா மாநில ஆளும் அரசு சிவசேனாவின் எதிர்ப்பை சம்பாதித்தார்.

இப்போது பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் நடத்தும் டெல்லி சலோ போராட்டம் தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ளார். சில நாள்களுக்குமுன் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, ’’ஷாஹீன் பாக் போராட்டத்தில் பங்கேற்ற மூதாட்டிதான் இந்தப் புகைப்படத்தில் இருப்பவர். இவரை 'டைம்' இதழ் இந்தியாவின் மிக சக்திவாய்ந்த பெண்மணி எனக் குறிப்பிட்டு இருக்கிறது.

இப்போது, இவர் டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் இருக்கிறார். இந்த மூதாட்டி போராட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ள 100 ரூபாய் கொடுங்கள் போதும்" என்று கூறியிருந்தார் கங்கனா. கங்கனாவின் இந்த ட்வீட்டுக்கு நெட்டிசன்கள் கொந்தளித்தனர்.

நெட்டிசன்கள் மட்டுமில்லை, பஞ்சாபி பாடகர்கள் கன்வர் க்ரேவால், தில்ஜந்த் தோசாந்த், ஹிமான்ஷு குரானா உள்ளிட்ட பிரபலங்கள்கூட கங்கனாவை வறுத்தெடுத்தனர். அதற்கு காரணம், 'டைம்' பத்திரிகை பாராட்டிய மூதாட்டியின் பெயர் பில்கிஸ் பானோ. ஆனால், பில்கிஸ் மூதாட்டிக்குப் பதிலாக மொஹிந்தர் கவுர் என்ற மூதாட்டியின் புகைப்படத்தை பகிர்ந்து கருத்து பதிவிட்டார் கங்கனா.

actress kangana,post,twitter,controversy,old lady retaliation ,நடிகை கங்கணா, பதிவு, டுவிட்டர், சர்ச்சை, மூதாட்டி பதிலடி

பில்கிஸ் மூதாட்டி போராட்டத்தில் பங்கெடுக்க வந்தபோது அவரை தடுத்த டெல்லி காவல்துறையினர் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர். இந்த விவரங்கள் தெரியாமல் ட்வீட் போட்டதை அறிந்த கங்கனா, சில மணி நேரங்களில் தவறாக பகிர்ந்த புகைப்படத்தை நீக்கினார். எனினும் சர்ச்சை அவரை விடவில்லை.

ஹக்கம் சிங் என்ற பஞ்சாப் வழக்கறிஞர் கங்கனாவுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார். ''கங்கனா நாட்டின் சீனியர் சிட்டிசனைக் காயப்படுத்தியிருக்கிறார். அவரை மட்டுமல்ல விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்ட அத்தனை பெண்களையும் அவமானப்படுத்திவிட்டார். எனவே, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். 7 நாள்களுக்குள் அதே ட்விட்டரில் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்" எனப் போர்க்கொடி தூக்கியுள்ளார்.

இதற்கிடையே, கங்கனா பகிர்ந்த புகைப்படத்தில் இருந்த மொஹிந்தர் கவுர் என்ற மூதாட்டி 'தி ட்ரிபியூன்' செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், "அந்த நடிகை, என் வீட்டிற்கு வந்து என் வாழ்க்கையை பார்த்திருக்கிறாரா. ரூ.100 கொடுத்தால் நான் போராட்டத்துக்கு வருவேன் என அவர் எப்படி சொல்லலாம். என்னிடம் 12 ஏக்கர் நிலம் இருக்கிறது.

என் வயல்களில் வேலைச் செய்யும் பணியாளர்களுக்கு 500 ரூபாய் நான் சம்பளம் கொடுத்து வருகிறேன். ஒரு விவசாயி என்ற முறையிலேயே நான் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டேன். விவசாயம் என்பது மிகவும் கடினமான விஷயம். அது தெரியாமல் நடிகை இப்படி பேசியது வருத்தம் அளிக்கிறது" என பதிலடியுடன் வேதனை தெரிவித்துள்ளார்.

Tags :
|