Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவால் வேலையை இழந்தாலும் தன்னம்பிக்கையால் ஜெயித்தவர்

கொரோனாவால் வேலையை இழந்தாலும் தன்னம்பிக்கையால் ஜெயித்தவர்

By: Nagaraj Thu, 03 Dec 2020 07:32:36 AM

கொரோனாவால் வேலையை இழந்தாலும் தன்னம்பிக்கையால் ஜெயித்தவர்

தன்னம்பிக்கை ஜெயித்தது...கொரோனா ஊரடங்கில் வேலையை இழந்த ஐந்து நட்சத்திர ஓட்டலின் தலைமை சமையல்காரர், மன உறுதியை விட்டு விடாமல் சாலையோரத்தில் பிரியாணி கடையை தொடங்கி தற்போது வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

மகாராஷ்டிர தலைநகர் மும்பையைச் சேர்ந்தவர் அக்ஷய் பார்க்கர். அங்குள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தலைமை சமையல்காரராக பணிபுரிந்து வந்தார். மாதந்தோறும் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி வந்தார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக அவர் பணிபுரிந்து வந்த நட்சத்திர ஓட்டல் கடும் நஷ்டத்தை சந்தித்தது. எந்த வருமானமும் இல்லாமல், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கும் நிலைக்கு ஓட்டல் நிர்வாகம் தள்ளப்பட்டது.

ஒரு கட்டத்துக்கு மேல் நஷ்டத்தை தாக்கு பிடிக்க முடியாமல், தங்களிடம் பணிபுரியும் பல ஊழியர்களை கடந்த மே மாதம் வேலையில் இருந்து ஓட்டல் நிர்வாகம் நிறுத்தியது. இவ்வாறு வேலை இழந்தவர்களில் அக்ஷய் பார்க்கரும் ஒருவர். வேலை பறிபோன அதிர்ச்சி ஒருபுறம். இனி குடும்பத்தை எப்படி நடத்த போகிறோம் என்ற கவலை ஒருபுறம் என அக்ஷய் பார்க்கர் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

நட்சத்திர ஓட்டல் முதல் சாதாரண ஓட்டல் வரை அனைத்து இடங்களிலும் வேலைக்கு விண்ணப்பித்தார். ஆனால், அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அந்த நேரத்தில்தான், அக்ஷய் பார்க்கருக்கு யோசனை ஒன்று தோன்றியது. சமையல் எனும் கைத்தொழில் நம்மிடம் இருக்கும் போது, நாம் ஏன் மற்றவர்களிடத்தில் வேலை கேட்டு அலைய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.

Tags :
|