Advertisement

ஒசூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்த ஒற்றை காட்டுயானை

By: Nagaraj Sat, 18 July 2020 12:00:52 PM

ஒசூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்த ஒற்றை காட்டுயானை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் தேசிய நெடுஞ்சாலையை ஒற்றைக் காட்டு யானை கடந்து சென்றதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

ஒசூர் அடுத்த சானமாவு வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக பத்துக்கும் மேற்பட்ட காட்டுயானைகள் தஞ்சமடைந்துள்ளன. இந்த யானை கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை காட்டு யானை ஓசூர் - சூளகிரி தேசிய நெடுஞ்சாலையை பேரண்டப்பள்ளி என்னுமிடத்தில் கடந்து பேரண்டப்பள்ளி வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்தது.

hosur,single elephant,crossed the road,motorists ,ஓசூர், ஒற்றை யானை, சாலையை கடந்தது, வாகன ஓட்டுனர்கள்

ஒற்றை காட்டு யானை நெடுஞ்சாலை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதனால் அவர்கள் வாகனங்களை அந்தந்த இடங்களிலேயே நிறுத்தினர். அந்த யானை சாலையை கடந்து சென்ற பின்னரே ஆசுவாசம் அடைந்து தங்களின் வாகனங்களை வேகமாக இயக்கி அங்கிருந்து சென்றனர்.

இதுபோன்று ஒற்றை யானை சாலையை கடக்கும் நிலையில் வாகன ஓட்டுனர்கள் அமைதி காத்து நிற்க வேண்டும். வாகனங்களில் உள்ள ஒலிப்பான்களை இயக்க கூடாது. அவ்வாறு இயக்கும் போது அதிர்வுறும் விலங்குகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags :
|