Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இரண்டு மாதங்களுக்கு பின்னர் பிரேசிலில் ஷாப்பிங் மால்கள் திறப்பு

இரண்டு மாதங்களுக்கு பின்னர் பிரேசிலில் ஷாப்பிங் மால்கள் திறப்பு

By: Nagaraj Fri, 12 June 2020 6:39:03 PM

இரண்டு மாதங்களுக்கு பின்னர் பிரேசிலில் ஷாப்பிங் மால்கள் திறப்பு

2 மாதங்களுக்கு பின் திறப்பு... பிரேசிலில், ஏறத்தாழ 2 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்டுள்ள ஷாப்பிங் மால்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, பொருட்களை வாங்கி சென்றனர்.

கொரோனா வைரஸ் தற்போது உலகில் உள்ள 215க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 75 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இதுவரை 4.23 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

shopping mall,food,temperature,government,permits ,ஷாப்பிங் மால், உணவு, வெப்பநிலை, அரசு, அனுமதி

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள பிரேசிலில், பொருளாதார நெருக்கடி கருதி ஷாப்பிங் மால்களை பிற்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அரசு அனுமதித்துள்ளது.

மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஷாப்பிங் மால்களுக்கு வருவோருக்கு வெப்ப நிலை சோதிக்கப்படுவதுடன், அங்குள்ள உணவகங்களில் பார்சல் மூலம் உணவு வினியோகிக்கப்படுகிறது .

Tags :
|