Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசி நவம்பர் மாதத்திற்குள் ரூ.1,000 விலையில் கிடைக்கும்

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசி நவம்பர் மாதத்திற்குள் ரூ.1,000 விலையில் கிடைக்கும்

By: Karunakaran Wed, 22 July 2020 10:43:00 AM

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசி நவம்பர் மாதத்திற்குள் ரூ.1,000 விலையில் கிடைக்கும்

உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசியை இங்கிலாந்தில் மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

கொரோனாவில் இருந்து மீண்டு விட வழி பிறந்துவிடும் என்ற புதிய நம்பிக்கையை இந்த தடுப்பூசி ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த தடுப்பூசி இந்தியாவில் தயாரித்து, 100 கோடி ‘டோஸ்’ வினியோகிப்பதற்கு இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் ஒப்பந்தம் செய்துள்ளது.

corona vaccine,oxford university,india,rs 1000 price ,கொரோனா தடுப்பூசி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இந்தியா, ரூ 1000 விலை

இந்நிலையில் இதுகுறித்து சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைவர் ஆதர் பூனாவாலா கூறுகையில், இந்திய மக்கள்தொகையுடன் ஒப்பிட்டு சீரம் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் தடுப்பூசியின் பாதி பங்கு ஏற்றுமதி செய்யப்படும். அதாவது ஒவ்வொரு மாதமும் தயாரிக்கப்படும் சுமார் 6 கோடி டோஸ்களில் இந்தியாவுக்கு 3 கோடி டோஸ்கள் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசி நவம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் கிடைக்கும், இந்த தடுப்பூசி ரூ.1,000 விலையில் கிடைக்கும். தடுப்பூசி எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரியவில்லை, எத்தனை பேரை அது பாதுகாக்கும் என்பது தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.




Tags :
|