Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆக்ஸ்போர்டு தடுப்பூசி இந்தியாவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி இந்தியாவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது

By: Nagaraj Wed, 09 Sept 2020 7:06:37 PM

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி இந்தியாவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது

எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது... ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசியின் இறுதிகட்ட சோதனை பிரிட்டனில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது இந்தியாவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என சீரம் இந்தியா தெரிவித்துள்ளது.

தடுப்பூசி போடப்பட்ட நபர் ஒருவருக்கு எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டதால், சோதனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளரான ஆஸ்ட்ராஜெனகா கூறியுள்ளார்.

serum india,vaccine,no infection,uk ,சீரம் இந்தியா, தடுப்பூசி, பாதிப்பு இல்லை, பிரிட்டன்

ஆனால் இந்தியாவில் நடக்கும் சோதனைகளில் விரும்பத்தகாத நிகழ்வுகள் எதுவும் ஏற்படவில்லை என சீரம் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரிட்டனில், தடுப்பூசியால் எந்த நேரடி பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், அதை எடுத்துக்கொண்ட நபருக்கு ஏற்கனவே நரம்பியல் பிரச்சனைகள் இருந்ததால் பாதிப்பு ஏற்பட்டது எனவும் சீரம் இந்தியாவின் தலைவர் அடார் பூனாவல்லா கூறியுள்ளார். இந்தியாவில் இந்த தடுப்பூசி சோதனையை சீரம் இந்தியா நடத்துகிறது.

Tags :