வரும் 31ம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டத் தொடர்
By: Nagaraj Fri, 13 Jan 2023 7:11:22 PM
புதுடெல்லி: நாடாளுமன்ற கூட்டத் தொடர்... இந்த ஆண்டு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி முடிவடையும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
மொத்தம் 27 அமர்வுகள் மற்றும் 67 நாட்கள் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இந்த ஆண்டின் முதல் அமர்வில் நாட்டின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள திரௌபதி முர்மு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்ற உள்ளார்.
மேலும். இந்த ஆண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட
உள்ளது. பிப்ரவரி 14 முதல் மார்ச் 12 வரை விடுமுறை அளிக்கப்படுகிறது.
அதன்
பிறகு தொடங்கும் கூட்டத் தொடரில் மார்ச் முதல் ஏப்ரல் வரை பட்ஜெட்
குறித்து விவாதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.