Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிங்கப்பூரில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது மக்கள் செயல் கட்சி

சிங்கப்பூரில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது மக்கள் செயல் கட்சி

By: Monisha Sat, 11 July 2020 11:15:05 AM

சிங்கப்பூரில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது மக்கள் செயல் கட்சி

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லுங் தலைமையிலான ஆட்சி முடிய இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில் தேர்தலைச் சந்திக்கப் போவதாக அவரது கட்சி அறிவித்து. கொரோனா ரோனா வைரஸ் பரவலுக்கு இடையே தேர்தல் மிகவும் பாதுகாப்பாக நடந்தது.

இதற்கு முன்பு, கடந்த தேர்தலில் 880 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தோற்று நோய் பரவல் காரணமாக கூட்டத்தைத் தவிர்க்க 1,100 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டது. அதோடு கூட மக்கள் வாக்களிக்க கூடுதலாக 2 மணிநேரம் வழங்கப்பட்டது. மக்கள் முகக்கவசம் அணிந்து மிகவும் கட்டுக்கோப்பாக வந்து வாக்களித்தனர்.

மொத்தமுள்ள 93 இடங்களுக்கு நடந்த தேர்தலில் 83 இடங்களை ஆளும் கட்சியான மக்கள் செயல் கட்சி அதாவது 93 சதவீத வாக்குகளைக் கைப்பற்றியது. 10 இடங்களில் எதிர்க்கட்சியான தொழிலாளர்கள் கட்சி வென்றது. கடந்த 2015-ம் ஆண்டு தேர்தலில் மக்கள் செயல் கட்சி 69.9 சதவீத வாக்குகள் பெற்ற நிலையில் இந்த முறை 61 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.

singapore,the regime,lee xian lung,election,people action party ,சிங்கப்பூர்,ஆட்சி,லீ சியன் லுங்,தேர்தல்,மக்கள் செயல் கட்சி

தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் லீ சியன் லுங் கூறியதாவது:- "அதிகமான பெரும்பான்மையில் வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். வாக்கு விகிதம் எதிர்பார்த்த அளவு இல்லை என்றாலும், மக்கள் செயல் கட்சிக்கு மக்கள் மத்தியில் தொடர்ந்து ஆதரவு இருப்பதையே காட்டுகிறது. இந்த வெற்றியை நாங்கள் பொறுப்புடன் பயன்படுத்தி, கொரோனா வைரஸ் பாதிப்பு, பொருளதாார நெருக்கடியிலிருந்து நாட்டையும், மக்களையும் மீட்க உழைப்போம்" எனத் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் தற்போது தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மேலும் இரு தொகுதியில்லா உறுப்பினர்கள் என மொத்தம் 12 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருப்பார்கள்.

சிங்கப்பூரில் கடந்த 1959-ம் ஆண்டிலிருந்து மக்கள் செயல் கட்சிதான் ஆட்சியில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :